மதுபோதையில் ஆய்வுக்கு வந்த வருவாய் அதிகாரி… விரட்டியடித்த பொதுமக்கள் ; விருத்தாசலம் அருகே பரபரப்பு..!!

Author: Babu Lakshmanan
2 November 2022, 8:19 pm

கடலூர் : விருத்தாசலம் அருகே மாவட்ட வருவாய் அதிகாரி மது போதையில் ஆய்வுக்கு வந்ததால் பொதுமக்கள் விரட்டியடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் குலதெய்வமான அக்கினி வீரன் அப்பகுதியில் சாலையோரம் வைத்து வழிபாடு செய்து வந்தனர். தற்போது சாலை விரிவாக்க பணிக்காக நெடுஞ்சாலை துறையினர் அக்கினி வீரனை அகற்றக்கோரி நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.

viruthachalam - updatenews360

இதனை ஏற்றுக் கொண்ட பொதுமக்கள் அதன் அருகிலேயே அரசு புறம்போக்கு இடத்தில் குலதெய்வம் அக்கினி வீரனை வைத்து வழிபாடு செய்து வந்தனர்.

viruthachalam - updatenews360

இந்நிலையில் இன்று திடீரென கடலூர் மாவட்ட வருவாய் நிர்வாக அலுவலர் கிருஷ்ணன் ஆய்வு செயய வந்துள்ளார். இதனை கருவேப்பலங்குறிச்சி கிராம மக்கள் 50க்கும் மேற்பட்டோர் மாவட்ட வருவாய் அதிகாரி கிருஷ்ணன் மது போதையில் இருப்பதை தெரிந்து கொண்டு கேட்டுள்ளனர். சுதாரித்துக் கொண்ட மாவட்ட வருவாய் அதிகாரி கிருஷ்ணன் காரில் ஏறி மின்னலோக வேகத்தில் அங்கிருந்து பறந்து சென்றுள்ளார்.

viruthachalam - updatenews360

அப்பகுதி பொதுமக்கள் காரை நோக்கி கூச்சலிட்டு விரட்டி அடித்துள்ளனர். இதுபோன்று அரசு உயர் பதவியில் இருக்கும் அதிகாரியே மதுபோதையில் ஆய்வுக்கு வருவது மிகவும் கேவலமாக இருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் மாவட்ட வருவாய் அதிகாரி கிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!