முழுமையாக நிரம்பியது அத்திவரதர் குளம்: பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு..!!

9 December 2020, 1:54 pm
athivarathar pond - updatenews360
Quick Share

காஞ்சிபுரம்: தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக காஞ்சிபுரத்தில் உள்ள அத்திவரதர் கோவிலில் உள்ள குளத்தில் முழுமையாக நிரம்பியது.

வங்கக்கடலில் அடுத்தடுத்து உருவான 2 புயல்கள் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும், புதுச்சேரியின் பல இடங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. ஒருசில பகுதிகளில் தொடர்கனமழை பெய்து வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு நீர்நிலைகள் முழுமையாக நிரம்பியுள்ளன.

காஞ்சிபுரத்தில் உள்ள வைணவத் தலங்களில் உலகப் புகழ் பெற்ற வரதராஜப் பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுவது அத்திவரதர் திருவிழா. இந்த திருவிழா 48 நாட்கள் நடைபெறும். இந்த அத்திவரதர் திருவிழா கடந்த 1019-ம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கி ஜூலை மாதம் வரை நடைபெற்றது.

இந்நிலையில், கன மழை காரணமாக, அத்தி வரதர் வீற்றிருக்கும் குளத்தில், நீராழி மண்டபம் மேல்தளம் வரை, தண்ணீர் நிரம்பி உள்ளது. கடந்த, 2015ல் பெய்த கன மழைக்கு பின், தற்போது தான், இந்தக் குளம் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.தொடர் மழையால், இந்தக் குளம் நிரம்பி, வெளியேறும் நீர், கிழக்கு ராஜகோபுரம் அருகில் உள்ள, பொற்றாமரைக் குளத்திற்கு செல்லும், அந்த குளமும் நிரம்பியுள்ளது.

நீராவி மண்டலத்தில் உள்ள அத்திவரத்தரை வசந்த மண்டபத்தில் வைக்கப்பட்டு பக்தர்களின் தரிசனத்துக்காக வைக்கப்பட்டிருந்தனர். இந்த அத்திவரதர் குளத்தில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழை காரணமாக குளத்தில் தண்ணீர் முழுமையாக நிரம்பியுள்ளது. இதனிடையே குளத்திற்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

Views: - 54

0

0