கடலூர், புதுச்சேரி, காஞ்சிபுரத்தில் அதீத கனமழை

26 November 2020, 12:06 am
Quick Share

சென்னை: நிவர் புயலால் அதீத கனமழை பெய்து வரும் நிலையில், கடலூர், புதுச்சேரி, காஞ்சிபுரத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

வங்க கடலில் உருவான நிவர் புயல் புதுச்சேரிக்கு வடக்கே அதிதீவிர புயலாக கரையை கடக்க தொடங்கியுள்ளது. புயலின் வேகம் தற்போது 20 கிலோ மீட்டர் என்ற அளவில் உள்ளது.புதுச்சேரிக்கு அருகே 3 மணி நேரத்தில் புயலின் மையப்பகுதி கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரித்துள்ளது. நிவர் புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

குறிப்பாக கடலூர், காஞ்சிபுரம், சென்னை, நாகை என தமிழகத்தின் பல பகுதிகளிலும் புதுச்சேரியிலும் அதீத மழை கொட்டுத்தீர்த்து வருகிறது. நிவர் புயலால் கரையை கடக்கத்தொடங்கியுள்ள நிலையில் கடலூர், புதுச்சேரி, காஞ்சிபுரத்தில் அதீத கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இப்பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

Views: - 0

0

0