தவெக நிர்வாகியின் போட்டோ மீது சாணம் வீச்சு.. உட்கட்சி பிரச்சனையால் தவெக தொண்டர்களே வீசிய அவலம்!

Author: Udayachandran RadhaKrishnan
13 August 2025, 1:14 pm

விழுப்புரத்தில் கடந்த 10ஆம் தேதி தவெக முன்னாள் நகர செயலாளராக இருந்த கில்லி சுகர்னா என்பவரின் பிறந்தநாள் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தவெக நிர்வாகிகள் கலந்துக்கொள்ளக்கூடாது என விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் குஷி மோகன் உத்தரவிட்டிருந்த நிலையில் அமையும் மீறி ஏராளமான தவெக தொண்டர்கள் பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த தெற்கு மாவட்ட செயலாளர் குஷி மோகன் பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட கண்டமங்கலம் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணராஜ் என்பவரை கட்சி பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு சந்திரசேகரன் என்பவரை புதியதாக நியமனம் செய்துள்ளார்.

இந்நிலையில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட சந்திரசேகரன் கண்டமங்கலம் பகுதி முழுவதும் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளார்.

இந்நிலையில் கண்டமங்கலம் ஒன்றிய செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட கிருஷ்ணராஜின் ஆதரவாளர்கள் நேற்று இரவு வளவனூர், சிறுவந்தாடு மற்றும் விழுப்புரம்-நாகை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டியில் உள்ள தெற்கு மாவட்ட செயலாளர் குஷி மோகன் புகைப்படத்தில் சாணியை அடித்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

குஷி மோகன் புகைப்படத்தில் சாணி அடிக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இந்நிலையில் கட்சி தலைமை அதிகாரப்பூர்வமாக ஒன்றிய செயலாளர்களை நியமிக்காத நிலையில் மாவட்ட செயலாளர் குஷி மோகன் வாய்மொழியாகவே கட்சி நிர்வாகிகளை நியமித்தும், நீக்கியும் வருவதாக தவெக கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!