துரைமுருகனின் குடும்பத்தினரை சுற்றி வளைக்கும் கொரோனா : மகன் கதிர் ஆனந்த் மற்றும் சகோதரருக்கு தொற்று உறுதி..!!

10 April 2021, 4:14 pm
Quick Share

வேலூர் : வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் மற்றும் துரைமுருகனின் சகோதரர் துரைசிங்காரம் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

வேலூர் மாவட்டம் காட்பாடியில் வசித்து வந்த காட்பாடி சட்டமன்ற உறுப்பினரும், திமுக பொதுசெயலாளருமான துரைமுருகனுக்கு அண்மையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், துரைமுருகனின் மகனும், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினருமான கதிர் ஆனந்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதே போன்று துரைமுருகனின் தம்பியான துரைசிங்காரத்திற்கும் கொரோனா பாதிப்புஉறுதி செய்யப்பட்டுள்ளது. அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

திமுகவின் முக்கிய எம்எல்ஏவும், நிர்வாகியுமான துரைமுருகனின் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது வேலூர் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

durai murugan brother - updatenews360

Views: - 18

0

0