அதிமுக ஆட்சியின் போது அகவிலைப்படி சரியான நேரத்தில் வழங்கப்பட்டது.. திமுக வேஸ்ட் : ஓபிஎஸ் சாடல்!!

Author: Udayachandran RadhaKrishnan
10 January 2024, 9:52 pm

அதிமுக ஆட்சியின் போது அகவிலைப்படி சரியான நேரத்தில் வழங்கப்பட்டது.. திமுக வேஸ்ட் : ஓபிஎஸ் சாடல்!!

அரியலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற அரியலூர் பெரம்பலூர் மாவட்ட செயல் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் அதிமுக முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பன்னீர் செல்வம் போக்குவரத்து தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வேண்டும்.

அவர்களுக்கு வழங்க வேண்டிய போனஸ் மற்றும் சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும் கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படி உள்ளிட்ட அனைத்து சலுகைகளும் வழங்கப்பட்டது.

மத்திய அரசு தொழிலாளர்களுக்கான அகவிலைப் படியை வழங்கிய உடனே அம்மாவின் ஆட்சியில் அவர்களுக்கு வழங்கப்பட்டது பிரதமர் நரேந்திர மோடி கடந்த 10 ஆண்டுகளில் சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறார் மூன்றாவது முறையாக மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்பதாலேயே அவர்களுக்கு எங்களது ஆதரவை அளித்துள்ளோம். திமுக மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர் அதனுடைய விளைவு வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தெரியவரும் என கூறினார்.

  • A famous actress living alone with a director? The secret has been revealed! இயக்குநருடன் தனிக்குடித்தனம் நடத்தும் பிரபல நடிகை? வெளியான ரகசியம்!