வைகை அணையின் நீர்மட்டம் உயர்வு : முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை…!!

14 January 2021, 5:10 pm
vaigai-dam-news-updatenews360
Quick Share

மதுரை: வைகை அணையின் நீர்மட்டம் 66 அடியாக உயர்ந்துள்ளதால் முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

வைகை அணைக்கு நீர்வரத்து ஒன்பதாயிரம் கன அடிக்கு மேல் அதிகரித்து உள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் 66 அடியாக உயர்ந்ததால் கரையோரப் பகுதிகளுக்கு முதற்கட்ட வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் வைகை அணைக்கு நீர்வரத்து இன்று காலை ஒன்பதாயிரத்து 652 கன அடியாக அதிகரித்தது. அணையின் நீர்மட்டம் 66 அடியாக உயர்ந்ததால் வைகை ஆற்றங்கரையோர மக்களுக்கு முதற்கட்ட வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அணையின் நீர்மட்டம் 68.5 அடியை எட்டும்போது இரண்டாவது எச்சரிக்கையும், 69 அடியை எட்டும்போது மூன்றாவது எச்சரிக்கையும் விடுக்கப்படும். வைகை அணை ஓரிரு நாளில் முழுக் கொள்ளளவை எட்டும் எனப் பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Views: - 7

0

0