சுதந்திர தின விழா எதிரொலி : மக்கள் கூடும் இடங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் அதிரடி சோதனை!!
Author: Udayachandran RadhaKrishnan13 August 2021, 10:55 am
கன்னியாகுமரி : சுதந்திர தினத்தை ஒட்டி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் ரெயில் நிலையத்தில் மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
நாளை மறுநாள் சுதந்திர தினவிழா நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் பாதுகாப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
மேலும் பொதுமக்கள் கூடும் இடங்களான விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், முக்கிய சுற்றுலா தலங்களில் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பேருந்துநிலையங்கள், சுற்றுலா தலங்கள், ரெயில்நிலையங்களில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நாகர்கோவில் கோட்டார் ரயில் நிலையத்தின் உள்ளே போலீசார் மோப்பநாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் வெடிகுண்டு நிபுணர்களுடன் தீவிர சோதனை நடத்தினர். மேலும் பயணிகள் கொண்டுவரும் பொருட்களை சோதனை செய்த பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்
0
0