அள்ள அள்ள வரும் பணம்.. லாட்டரி மார்ட்டினிடம் ED பறிமுதல்!

Author: Hariharasudhan
19 November 2024, 1:15 pm

லாட்டரி மார்ட்டினுக்கு தொடர்புடைய இடங்களில் சமீபத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் ரூ.12.41 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

கோயம்புத்தூர்: கோவையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் லாட்டரி மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் கடந்த நவம்பர் 14ஆம் தேதி முதல் அமலாக்கத்துறையினர் சோதனை நடைபெற்றது. தமிழகத்தில் சென்னை, கோவை உள்ளிட்ட 5 இடங்களிலும், கர்நாடகா, மேற்கு வங்காளம், பஞ்சாப், உத்தர பிரதேசம், மேகலாயா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் என மொத்தம் 22 இடங்களில் இச்சோதனை நடைபெற்றது.

இந்த நிலையில், இந்தச் சோதனை கடந்த நவம்பர் 16ஆம் தேதி இரவு வரை நீடித்தது. இதனிடையே, இந்தச் சோதனையில் மொத்தம் ரூ.12.41 கோடி ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். மேலும், பல்வேறு முக்கிய ஆவணங்கள், டிஜிட்டல் ஆவணங்கள் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும் அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

SEIZED MONEY FROM LOTTERY MARTIN

மேலும், இது தொடர்பாக அமலாக்கத்துறை எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டு உள்ளதாவது, “மார்ட்டின் மற்றும் அவரது நிறுவனமான பியூச்சர் கேமிங் மற்றும் ஓட்டலுக்கு எதிராக சட்டவிரோத பணப்பரிமாற்றச் சட்டத்தின் கீழ் தமிழ்நாடு, மேற்கு வங்கம், கர்நாடகா, உத்தர பிரதேசம், மேகாலயா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் உள்ள 22 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதையும் படிங்க: சினிமாவை மிஞ்சிய சம்பவம்.. தாய், மகளை கடத்தி ரூ.1 கோடி கேட்டு பேரம்!

இந்தச் சோதனையில் வழக்கு தொடர்பான ​​பல்வேறு குற்ற ஆவணங்கள், டிஜிட்டல் சாதனங்கள் ஆகியவை சிக்கின. அது மட்டுமல்லாமல், கணக்கில் வராத ரூ.12 கோடியே 41 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. மேலும், 6 கோடியே 42 லட்சம் ரூபாய் வங்கி பணம் முடக்கப்பட்டது” எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!