பள்ளி வளாகத்தில் 2 சிறுமிகள் பலி… குடும்பத்திற்கு நிதியுதவி வழங்காதது ஏன்..? திமுக அரசைக் கண்டித்து அதிமுக போராட்டம் அறிவிப்பு

Author: Babu Lakshmanan
14 October 2023, 12:36 pm
EPs Stalin - Updatenews360
Quick Share

வாணியம்பாடி – சிக்கனாங்குப்பத்தில்‌ உள்ள அரசு உயர்நிலைப்‌ பள்ளி வளாக விளையாட்டு மைதானத்தில்‌ இருந்த பள்ளத்தில்‌ நீரில்‌ மூழ்கி மரணமடைந்த மாணவிகளின்‌ குடும்பத்திற்கு நிதியுதவி வழங்க வலியுறுத்தி அதிமுக சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

விடியா திமுக அரசு பதவியேற்ற இந்த 29 மாத காலத்தில்‌, மக்களை பல்வேறு வகைகளில்‌ வாட்டி வதைத்து வருகிறது. குறிப்பாக, பள்ளிகளில்‌ கல்வி பயிலும்‌ மாணவ, மாணவியர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவி வருகிறது. அதேபோல்‌, திமுக-வினரின்‌ சட்ட விரோதச்‌ செயல்கள்‌ நாளுக்கு நாள்‌ அதிகரித்த வண்ணம்‌ உள்ளது.
இவைகளையெல்லாம்‌ விடியா திமுக அரசு கண்டும்‌ காணாமல்‌ இருந்து வருவது மிகுந்த வேதனை அளிக்கக்கூடிய விஷயமாகும்‌.

அந்த வகையில்‌, திருப்பத்தூர்‌ மாவட்டம்‌, வாணியம்பாடி தொகுதிக்கு உட்பட்ட, நாட்றம்பள்ளி ஒன்றியம்‌, சிக்கனாங்குப்பத்தில்‌ உள்ள அரசு உயர்நிலைப்‌ பள்ளி வளாகத்தில்‌ 10 அடி ஆழம்‌ கொண்ட பள்ளத்தில்‌ மழை நீர்‌ தேங்கி இருந்த நிலையில்‌ அப்பள்ளியில்‌ படித்து வந்த, கூலித்‌ தொழிலாளிகளின்‌ மகள்களான மோனிகா, ராஜலட்சுமி ஆகிய இருவரும்‌, கடந்த 27.9.2023 அன்று அந்தப்‌ பள்ளத்தில்‌ விழுந்து உயிரிழந்துள்ளதாகவும்‌;

அதேபோல்‌, ஆலங்காயம்‌ பேரூராட்சிப்‌ பகுதியில்‌ செயல்பட்டு வரும்‌ ஊராட்சி ஒன்றிய தொடக்கப்‌ பள்ளி வளாகத்தில்‌ 50 ஆண்டுகளுக்கும்‌ மேலான, 20-க்கும்‌ மேற்பட்ட பல லட்சம்‌ ரூபாய்‌ மதிப்பிலான உயிருள்ள தேக்கு மரங்கள்‌ தி.மு.க-வைச்‌ சேர்ந்த வார்டு உறுப்பினர்களின்‌ துணையோடு, அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக வெட்டிக்‌
கடத்தப்பட்டுள்ளதாகவும்‌ பொதுமக்கள்‌ புகார்‌ தெரிவிக்கின்றனர்‌.

சிக்கனாங்குப்பத்தில்‌ உள்ள அரசு உயர்நிலைப்‌ பள்ளியில்‌, கூலித்‌ தொழிலாளிகளின்‌ மகள்கள்‌ மரணமடைந்துவிட்ட துயர சம்பவத்திற்கு, விடியா திமுக அரசு இரங்கல்‌ தெரிவிக்காமலும்‌, இதுசம்பந்தமாக எந்தவித மேல்‌ நடவடிக்கையும்‌ எடுக்காமலும்‌ கிடப்பில்‌ போட்டதற்கு எனது கடும்‌ கண்டனத்தைத்‌ தெரிவித்துக்கொள்கிறேன்‌.

இந்நிலையில்‌, திருப்பத்தூர்‌ மாவட்டம்‌ வாணியம்பாடி தொகுதி, சிக்கனாங்குப்பத்தில்‌ உள்ள அரசு உயர்நிலைப்‌ பள்ளி வளாக விளையாட்டு மைதானத்தில்‌ இருந்த பள்ளத்தில்‌ நீரில்‌ மூழ்கி மரணமடைந்த மாணவிகளின்‌ குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கவும்‌; பள்ளிகளில்‌ கல்வி பயிலும்‌ மாணவ மாணவியர்களின்‌ பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளவும்‌; ஆலங்காயம்‌ ஊராட்சி ஒன்றிய தொடக்கப்‌ பள்ளி வளாகத்தில்‌ இருந்த தேக்கு மரங்களை சட்ட விரோதமாக வெட்டிக்‌ கடத்தியவர்கள்‌ மீது உரிய நடவடிக்கை எடுக்கவும்‌ விடியா திமுக அரசை வலியுறுத்தி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழக திருப்பத்தூர்‌ மாவட்டத்தின்‌ சார்பில்‌, 16.10.2023 – திங்கட்‌ கிழமை காலை 10 மணியளவில்‌, ஆலங்காயம்‌ ஊராட்சி ஒன்றிய அலுவலகம்‌ எதிரில்‌, மாபெரும்‌ கண்டன ஆர்ப்பாட்டம்‌ நடைபெறும்‌.

இந்தக்‌ கண்டன ஆர்ப்பாட்டம்‌, திருப்பத்தூர்‌ மாவட்டக்‌ கழகச்‌ செயலாளரும்‌, முன்னாள்‌ அமைச்சருமான திரு. வீரமணி அவர்கள்‌ தலைமையிலும்‌; ஆலங்காயம்‌ மேற்கு ஒன்றியக்‌ கழகச்‌ செயலாளரும்‌, வாணியம்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான செந்தில்குமார்‌, ஆலங்காயம்‌ கிழக்கு ஒன்றியக்‌ கழகச்‌ செயலாளரும்‌, முன்னாள்‌ சட்டமன்ற உறுப்பினருமான சம்பத்குமார்‌ ஆகியோர்‌ முன்னிலையிலும்‌ நடைபெறும்‌.

இந்தக்‌ கண்டன ஆர்ப்பாட்டத்தில்‌, திருப்பத்தூர்‌ மாவட்டத்தைச்‌ சேர்ந்த முன்னாள்‌ சட்டமன்ற உறுப்பினர்களும்‌, கழகத்தில்‌ பல்வேறு நிலைகளில்‌ பணியாற்றி வரும்‌ நிர்வாகிகளும்‌, உள்ளாட்சி அமைப்புகளின்‌ பிரதிநிதிகள்‌ மற்றும்‌ கூட்டுறவு அமைப்புகளின்‌ முன்னாள்‌ நிர்வாகிகளும்‌, கழக உடன்பிறப்புகளும்‌ பெருந்திரளாகக்‌ கலந்துகொள்ள வேண்டும்‌.

விடியா திமுக அரசின்‌ நிர்வாக சீர்கேடுகளையும்‌, அலட்சியப்‌ போக்கையும்‌ கண்டித்து நடைபெற உள்ள இந்தக்‌ கண்டன ஆர்ப்பாட்டத்தில்‌, பொதுமக்கள்‌ பெருந்திரளான அளவில்‌ கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்‌, என தெரிவித்துள்ளார்.

Views: - 352

0

0