வாய்ப்பு கிடைக்கலனா தளர்ந்து போகக் கூடாது… வெற்றிக்காக பணியாற்றுவோம் : தொண்டர்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள்..!!

4 March 2021, 5:17 pm
EPS OPS - Updatenews360
Quick Share

வரும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காவிட்டாலும், தொண்டர்கள் சோர்வடையாமல், ஒன்றிணைந்து தேர்தல் பணியாற்ற வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழக மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவர்களுக்கான விருப்ப மனு விநியோகம் கடந்த மாதம் 24ம் தேதி முதல் வழங்கப்பட்டு வந்தது. முதலில் ஏப்., 6ம் தேதி வரை விருப்ப மனுக்களை பூர்த்தி செய்து கொடுக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சட்டப்பேரவை தேர்தலுக்கு கால அவகாசம் மிகவும் குறைவாக இருப்பதால், தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்டவற்றை விரைந்து முடிக்க அதிமுக தலைமை முடிவு செய்தது. அதன்படி, விருப்ப மனுக்களை வழங்குவதற்கான கால அவகாசத்தை குறைத்து, மார்ச் 3ம் தேதியாக மாற்றி அறிவிக்கப்பட்டது.

நேற்றுடன் நிறைவடைந்த விருப்ப மனு தாக்கலில், அதிமுக சார்பில் போட்டியிட 8,174 பேர் விருப்ப மனு தாக்கல் செய்திருந்தனர். விருப்ப மனு அளித்தவர்களிடம் இன்று காலை முதல் நேர்காணல் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், வரும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காவிட்டாலும், தொண்டர்கள் சோர்வடையாமல், ஒன்றிணைந்து தேர்தல் பணியாற்ற வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் கூறியதாவது :- வரும் தேர்தலில் மட்டும் அதிமுக வெற்றி பெற்று விட்டால், அதிமுகவை எதிர்க்கும் எந்தக் கட்சிக்கும் இருக்காது. வரும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காவிட்டாலும், தொண்டர்கள் சோர்வடையாமல், ஒன்றிணைந்து தேர்தல் பணியாற்ற வேண்டும். வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு உள்ளாட்சி தேர்தலில் கட்டாயம் வாய்ப்பு கொடுக்கப்படும், என்றார்.

இதைத் தொடர்ந்து, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், “நேர்காணலில் கலந்து கொண்டவர்களில் யாராவது ஒருவர் கூட முதலமைச்சராகவோ அல்லது அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராகவோ கூட இருக்கலாம்,” என்றார்.

Views: - 21

0

0