“கள்ளச்சாராயம் இல்லை-அது மெத்தனால்” என மக்களின் வாழ்க்கையில் விளையாட வேண்டாம்!-முதல்வருக்கு இபிஎஸ் அட்வைஸ்!

Author:
19 June 2024, 3:44 pm

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடந்த கள்ளச்சாராய இறப்புகள் தனக்கு மிகுந்த வேதனை அளிப்பதாக தனது எக்ஸ் பக்கத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பதிவிட்டுள்ளார் அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்திய 5 பேர் உயிரிழந்ததாகவும் 10க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் வருகின்ற செய்திகள் கவலையளிக்கின்றன. உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் , வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த விடியா திமுக ஆட்சியில் கள்ளச்சாராயம் ஆறாய் ஓடுவதை தொடர்ச்சியாக நான் சுட்டிக்காட்டி வந்தும், இதனால் ஏற்கனவே பல உயிரிழப்புகள் ஏற்பட்ட பிறகும் கூட கள்ளச்சாராயத்தை ஒழிக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காத விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.

“கள்ளச்சாராயம் இல்லை- மெத்தனால்” என்று சொன்னது போல மக்கள் வாழ்க்கை விஷயத்தில் வார்த்தை விளையாட்டு விளையாடாமல், கள்ளச்சாராயத்திற்கு எந்த பெயர் இருந்தாலும் அதனை ஒழிக்க கடுமையான நடவடிக்கை எடுக்க விடியா திமுக அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.

  • actress kayadu lohar increased his salary double இதுதான் சரியான தருணம்-சமயம் பார்த்து உஷாராக சம்பளத்தை ஏற்றிய கயாது லோஹர்!