தனியார் கல்லூரியில் நடைபெற்ற கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம்: அமைச்சருக்கு கடிதம் எழுதிய சமூக ஆர்வலர்..!!

Author: Aarthi Sivakumar
6 January 2022, 2:56 pm
Quick Share

ஈரோடு: பள்ளி மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த அரசு அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் தனியார் கல்லூரியில் நடைபெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு கல்வி மாவட்டத்தில் கடந்த 21ம் தேதி பள்ளி மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்ட இந்த ஆலோசனைக் கூட்டம் ஈரோட்டில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றுள்ளது.

இந்த கூட்டத்தில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். மேலும், ஈரோடு மாவட்ட கல்வி அதிகாரி ராமகிருஷ்ணன், கல்வித்துறை துணை இயக்குநர், ஈரோடு மாவட்ட கண்காணிப்பு அதிகாரி குமார் ஆகியோர் கலந்து ஆலோசனை கூட்டம் தற்போது விவாதப்பொருளாகியுள்ளது.

அரசுப் பள்ளி தொடர்பான ஆலோசனை கூட்டத்தை அரசுப்பள்ளியில் நடத்தாமல் ஏன் தனியார் கல்லூரியில் நடத்தப்படுகிறது? அரசுப்பள்ளியில் ஆலோசனை கூட்டத்தை நடத்திய வசதிகள் இல்லையா? மேலும், அரசுப் பள்ளிகளில் ஆலோசனை கூட்டங்களை நடத்தினால்தான் அரசுப் பள்ளிகளின் முக்கியத்துவத்தை மக்கள் உணர்வார்கள், இதன்மூலம் அரசுப் பள்ளிகளிர் மாணவர் சேர்க்கையும் அதிகரிக்கும் என வழக்கறிஞர் ஒருவர் அக்கறையும் கேள்வி கேட்டுள்ளார்.

மேலும், இதுகுறித்து விவரத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளுக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார் ஈரோட்டைச் சேர்ந்த வழக்கறிஞரும், சமூக ஆர்வலருமான லோகநாதன். இதற்கு பிறகாவது, அரசு பள்ளிகள் குறித்த ஆலோசனை கூட்டங்கள் அரசு பள்ளிகளில் நடைபெறுமா என்பதை பார்க்கலாம்.

Views: - 238

0

0