ஈகைத் திருநாளாம் பக்ரீத் பண்டிகை : புத்தாடை அணிந்து சிறப்பு தொழுகை.. இனிப்புகள் வழங்கி இஸ்லாமியர்கள் கொண்டாட்டம்!!

Author: Udayachandran RadhaKrishnan
10 July 2022, 10:27 am

கோவையில் இஸ்லாமியர்களின் தியாகத் திருநாள் எனப்படும் பக்ரீத் பண்டிகையினை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். சகோதரத்துவத்தை ஏற்படுத்தும் விதமாக இஸ்லாமியர்களின் பக்ரீத் தியாக திருநாள் கொண்டாடபடுகிறது.

இந்நிலையில் கோவை ஜிஎம் நகர் பகுதிவாழ் மக்கள் அதிகாலையில் எழுந்து புத்தாடை அணிந்து சிறப்பு தொழுகை நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இதில் உலக மக்கள் நோய்நொடி இல்லாமல் ஆரோக்கியமாக வாழ வேண்டும் எனவும் மத நல்லிணக்கத்தின் அடிப்படையில் அனைவரும் ஒற்றுமையோடு இருக்க வேண்டும் என சிறப்பு தொழுகையில் வழிபாடு நடத்தினார்கள்.

பின்னர் தொழுகையில் இனிப்புகள் பரிமாறிக் கொண்டு மகிழ்ந்தனர்.தொடர்ந்து ஆடு,மாடு போன்றவற்றை குர்பானி கொடுத்து அந்த இறைச்சியின் ஒரு பங்கை ஏழை எளியவர்களுக்கும், ஒரு பங்கை உற்றார் உறவினர்களுக்கும், ஒரு பங்கை தங்களுக்கும் என பிரித்து கொடுத்து மகிழ்ச்சியுடன் தியாக திருநாளை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

வுமன்ஸ் இந்தியா மூமென்ட்ஸ் மாவட்ட செயற்குழு உறுப்பினரும் 84 வது வார்டு கவுன்சிலர் ஆலிமா ராஜா உசேன், மற்றும் மாவட்டச் செயலாளர்கள் சாஜிதா காமிலா உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?