தம்பி வீட்டில் நகை பணம் திருடிய அண்ணன் : ₹8 லட்சம், 3 சவரன் நகையுடன் கைது!!

9 July 2021, 7:44 pm
Brother Arrest - Updatenews360
Quick Share

திருப்பூர் : ஊத்துக்குளி அருகே தம்பி வீட்டில் ரூ.8 லட்சம் ரொக்கம் மற்றும் 3 சவரன் தங்க நகை திருடிய அண்ணணை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி பகுதியில் வசித்து வருபவர் சரவணன். இவர் பனியன் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இவர் தனது வீட்டில் ரூபாய் எட்டு லட்சம் பணத்தை பீரோவில் வைத்துள்ளார். மேலும் பீரோவில் 3 சவரன் தங்க சங்கிலியும் வைத்திருந்துள்ளார்.

இந்நிலையில் வீட்டில் இருந்த சரவணன் பீரோவில் பணம் மற்றும் நகை இல்லாதது தொடர்பாக ஊத்துக்குளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து ஊத்துக்குளி செங்கப்பள்ளி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது திருப்பூர் – கருணாம்பிகை நகர் பகுதியை சேர்ந்த முத்துசாமி மகன் சண்முகம் என்பவரிடம் சந்தேகத்தின் பேரில் விசாரணை செய்தனர்.

விசாரணையில் இவர் ஊத்துக்குளியில் உள்ள தனது தம்பி சரவணன் வீட்டில் பணம் எட்டு லட்சம் மற்றும் 3 சவரன் தங்க நகை ஆகியவற்றை திருடியதை ஒப்புக்கொண்டதால் சண்முகத்தை கைது செய்து, அவரிடமிருந்து இருசக்கர வாகனம் ரூபாய் 8 லட்சம் பணம் மற்றும் 3 சவரன் தங்க நகை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Views: - 244

0

0