வேலையை சரியா செய்யுங்க.. தேர்தல் வருது.. மக்கள் கிட்ட ஓட்டு கேட்கணும் : கவுன்சிலர்களை கடிந்து கொண்ட எம்எல்ஏ!

Author: Udayachandran RadhaKrishnan
18 July 2024, 2:07 pm

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவானம் பகுதியில் எம்எல்ஏ நந்தகுமார் இன்று திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அனைவருக்கும் குடிநீர் வழங்கும் அம்ருத் திட்டப் பணிகளில் தோண்டப்பட்ட குழிகளில் சரியான முறையில் ஒப்பந்ததாரர் சிமெண்ட் பேட்ச் ஒர்க் சரிவர செய்யாததால் பள்ளமாக இருந்தது உடனடியாக இதை அனைத்தையும் கொத்தி எடுத்து விட்டு மீண்டும் சிமெண்ட் சாலை தரமான முறையில் அமைக்க வேண்டும் எனவும் டிசம்பரில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது.

பணிகளை ஒழுங்காக செய்யவில்லை என்றால் மக்களிடம் ஓட்டு கேட்க முடியாது என கவுன்சிலர்களை கடிந்து கொண்டார்.

தொடர்ந்து வெட்டுவானம் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சுமார் கோடி மதிப்பீட்டில் நடைபெற உள்ள மேம்பாலம் அமைக்கும் பணியினை நேரில் ஆய்வு செய்தார் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தரவேண்டும் என அதிகாரிகள் இடத்தில் அறிவுரை வழங்கினார்.

  • actress kayadu lohar increased his salary double இதுதான் சரியான தருணம்-சமயம் பார்த்து உஷாராக சம்பளத்தை ஏற்றிய கயாது லோஹர்!