புயல் கரையை கடக்கும் போது மின்சாரம் நிறுத்தப்படும் : அமைச்சர் தங்கமணி தகவல்!!

23 November 2020, 12:31 pm
Thangamani - Updatenews360
Quick Share

நிவர் புயல் கரையை கடக்கும் போது மின்சாரம் நிறுத்தப்படும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

வரும் 25ஆம் தேதி நிவர் புயல் தீவிரப்புயலாக மகாபலிபுரம் – காரைக்கால் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் நிவர் புயலை எதிர்கொள்ள தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மின்துறை அமைச்சர் தங்கமணி, நிவர் புயலால் ஏற்படும் பாதிப்புகளை சமாளிக்க முன்னெச்சரிக்யைக மின்சாரம் நிறுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

மேலும் பாதிப்புகளை சமாளிக்க மின்துறை தயாராக உள்ளதாகவும், மின்கம்பங்கள் சேதம் அடைந்தால் அதை சீரமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். எவ்வளவு வேமானாலும் எந்த இடங்களில் புயல் கரையை கடந்தாலும் மின் துறை தயாராக உள்ளதாக தெரிவித்தார்.

கஜா புயல் அளவு இதன் பாதிப்பு இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளதால், கடந்த முறை போலவே சிறப்பாக செயல்படுவோம் என்றும், அதிக மழை பெய்யக்கூடும் என்பதால் கடலூர் மாவட்டத்திற்கு முன்னுரிமை அளித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.

அதே போல தாழ்வான பகுதிகளில் உள்ள மின் கம்பங்களை உடனடியாக சரி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார். முன்கூட்டியே மின்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துள்ளதாக குறிப்பிட்டார்.

Views: - 17

0

0