பவானி நீர்தேக்கத்திற்கு சென்று பைக்கில் திரும்பியவருக்கு நேர்ந்த சோகம் : மறைந்திருந்தது தாக்கிய ஒற்றை யானை..!!

Author: Udayachandran RadhaKrishnan
6 April 2022, 3:57 pm
Elephant Attack Dead -Updatenews360
Quick Share

கோவை : சிறுமுகை அருகே யானை தாக்கி மதுபோதையில் பைக்கில் வந்த ஜேசிபி ஒட்டுநர் பரிதாபமாக பலியானார்.

சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் நவீன்குமார் (வயது 27). இவர் சிறுமுகையை அடுத்துள்ள ஆலாங்கொம்பு விஸ்கோஸ் காலனியில் தங்கி ஜேசிபி டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.

இவர் நேற்றிரவு மது அருந்துவதற்காக விஸ்கோஸ் ஆலையின் பின்புறம் உள்ள பவானியாற்றின் நீர்த்தேக்கப்பகுதியில் சென்றுள்ளார். மது அருந்தி விட்டு மீண்டும் தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்ப கிளம்பியுள்ளார்.

இந்நிலையில் அப்பகுதியில் மறைந்திருந்த ஒற்றை காட்டு யானை நவீன்குமாரை பலமாக தாக்கியுள்ளது. இதில் நவீன்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

இச்சம்பவம் குறித்து அறிந்த சிறுமுகை வனத்துறையினர் மற்றும் போலீசார் விரைந்து சென்று சடலத்தை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து சிறுமுகை வனத்துறையினர் மற்றும் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 479

0

0