மின்வேலியால் யானை உயிரிழந்த விவகாரம் : தோட்ட உரிமையாளர் கைது!!
19 November 2020, 10:42 amகோவை : மேட்டுப்பாளையம் அருகே விவசாய நிலத்தில் சட்டவிரோத மின்சாரம் பாய்ச்சி யானை உயிரிழந்த விவகாரத்தில் தோட்ட உரிமையாளர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த சிறுமுகை வனச்சரகத்திற்குட்பட்ட பெத்திகுட்டையில் விவசாய நிலத்தில் புகுந்த காட்டுயானை அங்கு சட்டவிரோதமாக அமைக்கபட்ட மின் வேலியில் சிக்கி காட்டுயானை உயிரிழந்தது
பெத்திகுட்டை பகுதியை சேர்ந்த விவசாயி முருகேசன் தனது வாழை தோட்டத்தில் வனவிலங்குகள் நுழைவதை தடுக்க சட்டவிரோத மின்வேலியை ஏற்படுத்தியுள்ளார்
விவசாய நிலங்களில் பேட்டரி மின்சாரத்தை மட்டுமே வேலிகளில் பயன்படுத்த வேண்டும் என்ற விதி இருந்தும் அதனை மதிக்காமல் விவசாயி முருகேசன் தனது விவசாய கிணற்றில் இருந்த மோட்டார் மின்சாரத்தை எடுத்து சட்டவிரோதமாக வேலியில் பாய்ச்சியுள்ளார்
இந்த நிலையில் அவரது தோட்டத்திற்கு உணவு தேடி வந்த காட்டுயானை ஒன்று அந்த மின்வேலியில் சிக்கி உயிரிழந்தது. இதனையடுத்து தகவலறிந்து அங்கு சென்ற சிறுமுகை வனத்துறையினர் தோட்ட உரிமையாளரான முருகேசன் என்பவரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் காட்டு பன்றி,மான் உள்ளிட்ட வனவிலங்குகளை கட்டுபடுத்த சட்டவிரோத மின்வேலியை அமைத்து தெரியவந்தது. இதனையடுத்து வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்த வனத்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்