காட்டாற்று வெள்ளத்தில் தத்தளித்த யானை : தப்பிக்க முடியாமல் பலியான சோகம்!!

Author: Udayachandran RadhaKrishnan
18 October 2021, 4:43 pm
Elephant Dead -Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : கனமழை காரணமாக கோதையாறு மோதிரமலை பகுதியில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் யானை சிக்கி பலியானது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்கள் பெய்த கனமழையால் கோதையாறு மலை கிராமங்களில் காட்டாற்று காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதன் காரணமாக சாலைகளில் மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதோடு போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இந்நிலையில் மலை கிராம பகுதியான கோல மடக்கு பகுதியில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தால் அடித்து வரப்பட்ட குட்டி யானை கோதையாற்றில் பலியாகியுள்ளது.

தற்போது மலை கிராம மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இது குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Views: - 583

0

0