அமைச்சர் உதயநிதி பேசும் போது காலியான இருக்கைகள்.. பிசுபிசுத்துப் போன திமுக இளைஞரணி மாநாடு!!

Author: Udayachandran RadhaKrishnan
21 January 2024, 6:36 pm

அமைச்சர் உதயநிதி பேசும் போது காலியான இருக்கைகள்.. பிசுபிசுத்துப் போன திமுக இளைஞரணி மாநாடு!!

சேலம் பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் திமுக இளைஞரணி இரண்டாவது மாநில மாநாடு முன்னிட்டு சுமார் 600 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு பல லட்ச ரூபாய் மதிப்பின் முகப்பு பகுதியை ஏற்பாடு செய்திருந்தனர்.

சுமார் ஒட்டுமொத்தமாக பல கோடி கோடி செலவு செய்து மிகப்பிரம்மாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாநாடு நேற்று மாலை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலமையில் இரு சக்ர பேரணி நடைபெற்றதை தொடர்ந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட டிரோன்கள் மூலம் பெரியார் அண்ணா உள்ளிட்ட தலைவர்களின் திருவருத்தினை வானில் உருவங்களாக அலங்கரிக்கப்பட்டது.

இன்று காலை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மற்றும் கனிமொழி ஆகியோர் கொடியேற்றி மாநாட்டை துவக்கி வைத்தனர். அப்போது தமிழக முதல் வருகையை முன்னிட்டு முகப்பு பகுதியில் மட்டும் கூட்டம் இருந்தது இதனை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் தலைமையில் மாநாட்டின் காலையில் தொடங்கிய மாநாட்டில் பல்வேறு துறை அமைச்சர்கள் திமுக முக்கிய பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்புரை ஆட்சி வந்தனர்.

அப்போது விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாநாட்டு திறப்பு உரை மற்றும் தீர்மானம் குறித்து பேசினார் அப்போது ஒரு பகுதியில் மட்டுமே மக்கள் தொண்டர்கள் அமர்ந்திருந்தனர்.

அதன் பிறகு சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நாற்காலிகள் காலியாகவே இருந்தது சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கூடுவார்கள் என்று அறிவித்திருந்த நிலையில்ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மட்டுமே அமர்ந்திருந்தனர்.

ஒரு சில தொண்டர்கள் வெளியே வலம் வந்து கொண்டிருந்தனர் மேலும் மாநாட்டிற்கு வந்திருந்த வாகனங்கள் நிறுத்துவதற்கு அமைக்கப்பட்டிருந்த குறைந்த அளவிலேயே வாகனங்கள் இருந்தன

காலையிலேயே மிகவும் உற்சாகத்துடன் தொடங்கிய மாநாட்டில் உதயநிதி ஸ்டாலின் எதிர்பார்த்தபடி கூட்டம் இல்லாததால் மாநாட்டு பிசுபிசுபிசுத்தது

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!