திமுக எம்பி ஆ.ராசாவின் அரசியல் அத்தியாயத்திற்கு விரைவில் END CARD : பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் அதிரடி பேட்டி!!

Author: Udayachandran RadhaKrishnan
5 July 2022, 12:55 pm
Cbe Bjp Protest - Updatenews360
Quick Share

தமிழக அரசை கண்டித்து கோவை சிவானந்தாகாலனி பகுதியில் பாஜகவினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாஜக மாவட்ட தலைவர் உத்தம ராமசாமி தலைமையில் நடைபெற்று வரும் போராட்டத்தில் அக்கட்சியின் மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் மற்றும் தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் உட்பட 500 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்..

சி. பி. ராதாகிருஷ்ணன் செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில், தமிழகமெங்கும் தமிழக அரசின் கையாலாகாத தனத்தை கண்டித்தும், ஒரு நாள் உண்ணாவிரதம் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.

திமுக இன்றும் என்றும் தன்னை திருத்தி கொள்ளப்போவதில்லை என்ற உண்மையை மக்களிடத்தில் வெளிப்படுத்திருக்கிறது .மாநில அரசு மக்களை காக்கும் அரசாக இருக்க வேண்டும்.

திமுக அரசு பொய் ஆட்சி நடைபெறுகிறது. வாக்குறுதி தந்து ஆட்சிக்கு வந்தார்களோ அதில் ஒவ்வொன்றாக மறந்து வருகிறார்கள். அதனை கண்டித்து இந்த அறப்போர் உண்ணாவிரதம் நடைபெற்று வருகிறது.

திமுக என சொன்னாலே ஊழலோடு பிறந்து வளர்ந்து திகழ்ந்து வருகிறது. மக்கள் நலன் இன்றி தங்கள் நலன் மட்டுமே கொண்டுள்ளனர். இதை பொறுத்து கொள்ள முடியாதவர்கள் மத்திய அரசின் மீது தேவையற்ற குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்கள்.

அக்னி பாத் திட்டத்தில் வாய்ப்பு தேடி அலையும் இளைஞர்களுக்கு ஒரு வாய்ப்பை உருவாக்கி தர வேண்டும். எந்த இடத்திலும் ராணுவத்திற்கு நிரந்தரமாக ஆளை எடுக்க மாட்டோம் என மத்திய அரசு கூறவில்லை. இந்த திட்டம் இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் தேசபக்தியை தரும் பயிற்சியாக இது இருக்கும் பல வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை தரும் பயிற்சியாக இது இருக்கும்.

எந்த திட்டத்தை மோடி கொண்டு வந்தாலும் அதை ஏளனப்படுத்தி அதன் மூலம் திமுக அரசு அரசியல் செய்து வருகிறது. தாமரை விரைவில் தமிழகத்திலும் மலரும். அதிமுக தலைமையில் இருந்த தேசிய ஜனநாயக கூட்டனியில் வந்துவிட கூடாது என்பதற்காக ஆயிரம் ரூபாய், பெட்ரோல் டீசல் விலை குறைப்பதாக கூறினர்.

ஜிஎஸ்டி வரம்பில் பெட்ரோல் டீசல் வருவதற்கு மத்திய அரசு தயாராக இருந்தும் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதில் முதல் முதல்வராக ஸ்டாலின் உள்ளார். 2 ஜி யிலிருந்து ஆ. ராசா தன்னிடம் உள்ள பணத்தின் மூலம் தப்பித்து வரலாம். பிரிவினை மூலம் ஆ. ராசா முன்னேற முயன்றால் அவரது அரசியல் அத்தியாயம் முடிவடையும் எனக் சி. பி. ராதாகிருஷ்ணன் மற்றும் வானதி ஸ்ரீனிவாசன் தெரிவித்தனர்.

Views: - 539

0

0