அமைச்சர் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு… ED வளையத்தில் அமைச்சரின் மகன் மற்றும் மகள்.. அதிர்ச்சியில் திமுக..!!
Author: Udayachandran RadhaKrishnan16 August 2025, 10:40 am
சென்னை, மதுரை, திண்டுக்கல் உள்பட ஐ பெரியசாமிக்கு சொந்தமான இடங்களில் ED சோதனை நடத்த வருவது திமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் திண்டுக்கல் துரைராஜ் நகர் பகுதியில் உள்ள அமைச்சர் ஐ. பெரியசாமியின் வீடு, சீலப்பாடி பகுதியில் உள்ள அவரது மகன் பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் வீடு, ரவுண்ட் ரோடு பகுதியில் உள்ள அவரது மகள் இந்திராணி வீடு ஆகிய இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதை தவிர சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லதிலும்,மதுரையிலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். துப்பாக்கி ஏந்திய மத்திய CRPF போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த திமுக ஆட்சியின் போது வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த பேது கருணாநிதியின் பாதுகாவலராக இருந்த அதிகாரிகளுக்கு வீட்டுமனை ஒதுக்கீடு செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இது தொடர்பான வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்ட போதிலும், வழக்கு அண்மையில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
