திண்டுக்கல் செல்ல கோவை விமானம் நிலையம் வந்த இபிஎஸ் : அதிமுக சார்பாக உற்சாக வரவேற்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
6 September 2022, 7:07 pm

திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக கோவை விமான நிலையம் வந்தடைந்தார் முன்னாள் முதல்வரும் அதிமுக இடைகால பொது செயலாளருமான எடப்பாடி கே பழனிச்சாமி.

கோவை விமான நிலையம் வந்த முன்னாள் முதல்வரும் அதிமுக இடைகால பொதுச்செயலாளருமான எடப்பாடி கே பழனிச்சாமிக்கு முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி தலைமையில் முன்னாள் சட்டபேரவை துணை சபாநாயகரும் அதிமுக தேர்தல் பிரிவு செயலாளருமான பொள்ளாச்சி ஜெயராமன், மாநகர் மாவட்ட செயலாளர் அம்மன் கே அர்ஜுனன், கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் உட்பட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களும், முக்கிய நிர்வாகிகளும் மலர்கொத்து கொடுத்து வரவேற்கப்பட்டது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!