ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு என்னாச்சு? மீண்டும் ஐசியூ பிரிவில் அனுமதி.. மருத்துவமனை கூறுவது என்ன?

Author: Udayachandran RadhaKrishnan
26 March 2023, 1:17 pm

ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுவுக்கு திடீர் மூச்சு திணறல் ஏற்பட்டு போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கடந்த சில நாட்களுக்கு முன் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் கொரோனா தொற்றும் ஏற்பட்டது.

இதனால் தனிமைப்படுத்தப்பட்டு தனிவார்டில் வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கொரோனா தொற்றில் இருந்து அவர் மீண்டு விட்டதாக கூறப்பட்டது. இதை தொடர்ந்து அவரின் உடல் நிலை சீராக உள்ளதாகவும் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருப்பார் என்றும் விரைவில் வீடு திரும்புவார் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில், ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மீண்டும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனாவில் இருந்து குணமடைந்து வருவதாக மருத்துவமனை நிர்வாகம் கூறிய நிலையில் மீண்டும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

  • vignesh shivan and nayanthara team up with jani master create controversies போக்சோவில் கைதான நபருடன் பணியாற்றிய விக்னேஷ் சிவன்? நயன்தாராவை கட்டம் கட்டிய நெட்டிசன்கள்!