158 நாட்களுக்கு பிறகு கதவை திறந்த பண்ணாரி : பக்தர்கள் கூட்டமின்றி வெறிச்சோடியது

1 September 2020, 10:03 am
Sathy Bannari- Updatenews360
Quick Share

ஈரோடு : சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி மாரியம்மன் கோவில் நடை 158 நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்டது.

தமிழகத்தில் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றான பண்ணாரி மாரியம்மன் திருக்கோவில் நடை இன்று காலை 6.00 மணிக்கு திறக்கப்பட்டது. 158 நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்ட கோவிலில் பக்தர்கள் கூட்டம் இல்லை.

முக கவசம் அணிந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.கோவில் நிர்வாகம் சார்பில் காய்ச்சல் கருவி மூலம் சோதனை செய்யப்பட்டு சானி டைசர் வழங்கப்பட்டு சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

அலங்காரப் பொருட்கள் மற்றும் அபிஷேகப் பொருட்களும் அனுமதிக்கப்படவில்லை.போதிய பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தாலும், பேருந்து வசதி அதிகம் இல்லாத காரணத்தினாலும், கொரோனா தொற்று அச்சத்தின் காரணமாகவும், கோவில் திறக்கப்பட்ட தகவல் தெரியாததால் கூட்டமின்றி வெறிச்சோடி கிடப்பதாக பக்தர்கள் தெரிவித்தனர்.

Views: - 0

0

0