ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… டிடிவி தினகரன் போட்டியிடப்போவதாக அறிவிப்பு.. திமுகவுக்கு அதிர்ச்சி வைத்தியம் நிச்சயம் என பேச்சு!!

Author: Babu Lakshmanan
24 January 2023, 11:38 am

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் நான் போட்டியிட வாய்ப்புள்ளதாகவும், வரும் 27ம் தேதி தெரியவரும் என்று அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் பாகனேரியில் கொடியேற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொது செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது :- ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் நான் போட்டியிட வாய்ப்புள்ளது. வரும் 27 ம் தேதி தெரியவரும். ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் யாரும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வாய்ப்பில்லை. இரட்டை இலை சின்னம் யாருக்கும் கிடைக்காமல் போகத்தான் வாய்ப்புள்ளது.

ஜெயலலிதா, கலைஞருக்கு பிறகு பல முனை போட்டியுள்ளது. தலைவர்களை காலம் உருவாக்கிய பிறகு இரு முனை போட்டி ஏற்படும். திமுக நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை கொடுத்தால், மக்களை சந்திக்க அஞ்சி ஒளிகின்ற நிலை ஏற்பட்டுள்ளது. இடைத்தேர்தலில் திமுக திருந்த வேண்டும் என்பதற்காக, மக்கள் அவர்களை தோற்கடித்து அதிர்ச்சி வைத்தியம் அளிப்பார்கள்.

அதிமுக ஒபிஎஸ், இபிஎஸ் இரு அணிகளும் ஒன்று சேர வாய்ப்பு அத்தைக்கு மீசை முளைக்கடும் பிறகு பார்க்கலாம், என தெரிவித்தார்.

  • actress kayadu lohar increased his salary double இதுதான் சரியான தருணம்-சமயம் பார்த்து உஷாராக சம்பளத்தை ஏற்றிய கயாது லோஹர்!