மலைவாழ் மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி : சிக்னல் சிக்கலை தீர்க்க அமைச்சர் செங்கோட்டையன் உறுதி!!

Author: Udayachandran
2 October 2020, 3:42 pm
sengottaiyan - updatenews360
Quick Share

ஈரோடு : மலைப்பகுதியில் இணையதள சிக்னல் கிடைக்காததால் மாணவர்கள் ஆன்லைன் வகுப்பு சேருவதில் சிக்கல் இருப்பதாகவும், இது தொடர்பாக பரிசீலித்து வருவதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு கடன் உதவிகளை வழங்கினர்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், அரசு அறிவித்த கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூலிப்பதாக 14 பள்ளிகள் மீது புகார் வந்ததாகவும், இதில் 4 பள்ளிகள் விளக்கம் அளித்திருப்பதாகவும், மீதமுள்ள 9 பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதன் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

தற்போது கொரோனா பரவி வருவதால் இலவச மடிக்கணினி வழங்குவதற்கான டெண்டர் விடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறிய செங்கோட்டையன், அனைத்து மாணவ மாணவிகளுக்கும் பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் என்றார்.

மலைப்பகுதி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக கூறிய அவர், தமிழகம் முழுவதும் 52 மலைக்கிராமங்களில் இணையவழி சிக்னல் கிடைப்பதில் சிக்கல் இருப்பதாகவும், இதுதொடர்பாக பரிசீலனை செய்து வருவதாகவும் தெரிவித்தார்.

Views: - 34

0

0