தனியார் உர விற்பனை நிறுவன உரிமையாளர் வீட்டில் ஐ.டி. ரெய்டு : முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்

1 September 2020, 11:42 am
Income tax - updatenews360
Quick Share

ஈரோடு : ஈரோடு மாவட்டத்தில் உள்ள பிரபல தனியார் உர விற்பனை நிறுவனத்தின் உரிமையாளரின் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு மைவட்டம் கோபி செட்டிபாளையத்தை மையமாக செயல்பட்டு வரும் பிரபல தனியா உர விற்பனை நிறுவனத்தின் உரிமையாளர் மீது நிலம் வாங்கியதில் முறைகேடு ஏற்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக கிடைத்த தகவலின் பேரில், கோபி செட்டிபாளையத்தில் உள்ள தனியார் மொத்த உர விற்பனை நிறுவன உரிமையாளர் வீட்டில் கோவை, ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

உரவிற்பனை நிறுவன உரிமையாளர் வீடு மற்றும் அலுவலகங்களில் நடத்தப்பட்டு வரும் சோதனையில் கணக்கில் வராத பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Views: - 0

0

0