இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலனுக்காக நடந்த ஊர்வலத்தில் பரபரப்பு : போலீசார் சமரசம்!!

Author: Udayachandran
1 October 2020, 8:37 pm
Hindu Munnani Issuue - updatenews360
Quick Share

ஈரோடு : இந்து முன்னணி தலைவர் இராமகோபாலன் மறைவையொட்டி சத்தியமங்கலத்தில் ஊர்வலம் நடைபெறுவதில் இந்து முன்னணியினர் இடையே வருத்தம் ஏற்பட்டதால் சுமார் ஒரு மணிநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

நேற்று இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலன் காலமானார் இதனையொட்டி சத்தியமங்கலம், பவானிசாகர், புஞ்சைபுளியம்பட்டி ஆகிய பகுதிகளில் இன்று இந்து முன்னணியினர் மற்றும் பிஜேபியினர் சார்பில் கடையடைப்பு நடைபெற்றது மேலும் மாலை 4 மணி அளவில் ராமகோபாலன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்து முன்னணி சார்பில் ஊர்வலம் நடைபெறும் என்று அறிவித்து இருந்தனர்.

வழக்கமாக கட்சி சார்ந்த ஊர்வலங்கள் எதுவாக இருப்பினும் சத்தியமங்கலம் எஸ்ஆர்டி கார்னர் பகுதியில் இருந்து பகுதி வரை ஊர்வலம் நடைபெறும் வழக்கம். ஆனால் காவல்துறையினர் கோட்டுவீராம்பாளையம் பகுதியில் இருந்து பஸ் நிலையம் வரை மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனால் எஸ்.ஆர்.டி கார்னர் பகுதியில் ராமகோபாலன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக காலையிலிருந்து காத்திருந்த இந்து முன்னணியைச் சேர்ந்த இளைஞர்கள் ஆத்திரமடைந்து எஸ்.ஆர்.டி காரிலிருந்து தாங்களாகவே ஊர் வலம் வருவோம் என கூறியதால் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி இராமகோபாலன் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்திவிட்டு அமைதியாக ஊர்வலம் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

இதனையடுத்து புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய இந்து முன்னணியை அப்பகுதி இளைஞர்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் தனி நபர்களாக பஸ் நிலையம் வரை அமைதி ஊர்வலம் சென்றனர். இதனால் பகுதியில் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Views: - 45

0

0