இளைஞர் கல்லால் அடித்துக் கொலை : ஒருவர் கைது!!

11 October 2020, 11:31 am
Youth Murder - Updatenews360
Quick Share

ஈரோடு : சத்தியமங்கலம் அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவர் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டார்.

ஈரோடு மாவட்டம்சத்தியமங்கலத்தை அடுத்துள்ள பவானிசாகர் செல்லும் வழியில் உள்ளது கரியகவுண்டன்புதூர் கிராமம். அங்கு வசிக்கும் கூலித்தொழிலாளி முருகன் மற்றும் அவரது உறவினர் மாரி ஆகிய இருவரும் நேற்று மாரியின் வீட்டில் மது அருந்தியுள்ளனர்.

மது அருந்திய போதையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் கல்லால் அடித்து இருவரும் சரமாரியாக தாக்கிக் கொண்டதாக தெரிகிறது. இதில் கூலி தொழிலாளி முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கொலை செய்துவிட்டு தப்பிச் சென்ற மாரி இன்று காலை பவானிசாகர் பேருந்து நிலையம் அருகே நின்றிருந்த போது பவானிசாகர் காவல்துறையினர் அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

இதில் குடிபோதையில் இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் கல்லெடுத்து முருகன் தலையில் அடித்ததில் முருகன் உயிரிழந்ததாக மாரி தெரிவித்துள்ளார். இதனையடுத்து கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மாரியை பவானிசாகர் போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Views: - 0

0

0