தாலி கட்டுன ஈரம் கூட காயல… திருப்பதிக்கு படியேறிய புதுமாப்பிள்ளை : நொடியில் நடந்த மரணம்!

Author: Udayachandran RadhaKrishnan
25 August 2024, 1:11 pm

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியைச் சேர்ந்தவர் நரேஷ் இவர் பெங்களூருவில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

இவருக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பு தான் ஸ்வாதி என்ற பெண்ணுடன் தடபுடலாக திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் பெற்றோரின் வேண்டுதலை நிறைவேற்ற திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய நரேஷ் தனது குடும்பத்தினருடன் நேற்று திருப்பதி சென்றுள்ளார்.

அலிபிரி நடைபாதை வழியாக நரேஷ் குடும்பத்துடன் சென்றுகொண்டிருந்தார். அப்போது 2,350வது படியில் காலை வைக்கும் போது திடீரென மயங்கினார். இதனால் அதிர்ச்சியில் அலறிய குடும்பத்தினர் ஆம்புலன்ஸ் மூலம் நரேஷை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். திருமணம் முடிந்த 15 நாளில் புதுமாப்பிள்ளை திருப்பதி கோயிலுக்கு செல்லும் வழியில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கணவரின் உடலை பார்த்து மனைவி கதறி அழும் காட்சிகள் பொதுமக்கள் கண்களில் இருந்து கண்ணீர் வரவைழத்தது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!