பெருங்கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள்: கிருஷ்ணகிரி அகழாய்வில் கண்டெடுப்பு..!!

14 July 2021, 12:48 pm
Quick Share

கிருஷ்ணகிரி: மயிலாடும்பாறை அருகே பெருங்கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில், பாறை ஓவியங்கள், புதிய கற்கால மனிதர்கள் வாழ்ந்த சான்றுகள் கொண்ட மாவட்டத்தில் கிருஷ்ணகிரியும் ஒன்று. அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரை அடுத்த மயிலாடும்பாறையின் அடிவாரத்தில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்த பகுதியில் அகழாய்வு பணிகளை மேற்கொள்ள அரசு அனுமதி அளித்தது. அந்த அடிப்படையில் தொல்லியல் பொறுப்பாளர் சக்திவேல் தலைமையிலான தொல்லியல் துறையினர் கடந்த மூன்று மாதங்களாக தொடர்ந்து மயிலாடும்பாறை அடிவாரத்தில் அகழாய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த பகுதியில் சுமார் 2 ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமையான வாள் ஒன்றை கண்டறியப்பட்டுள்ளது. மேலும், ஆயுதங்கள் கூர் தீட்டும் பகுதி இருப்பதும், புதிய கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான பாறை ஓவியங்களும் கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Views: - 176

0

0