அழகிரியின் மகன் துரை தயாநிதிக்கு திடீர் உடல்நலக்குறைவு… மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் பரபரப்பு..!!

Author: Babu Lakshmanan
14 March 2024, 6:09 pm

முன்னாள் மத்திய அமைச்சரான மு.க. அழகிரியின் மகன் துரை தயாநிதி திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க. அழகிரி. இவர், திமுக – காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போது, மத்திய அமைச்சராக பதவி வகித்துள்ளார்.

இந்த நிலையில், மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த ஒரு மாதமாக சென்னை அப்பல்லோ மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் இன்று அவர் வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!