இன்னும் 3 மாதம் தான்… அதிமுகவால் நடக்கப்போகும் மாற்றம் ; ஜெயக்குமார் சொன்ன சூசக தகவல்!!

Author: Babu Lakshmanan
27 November 2023, 9:54 pm

இன்னும் 3 மாதத்தில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை – வேப்பேரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது :- ஜெயலலிதா நினைவிடத்தில் டிசம்பர் 5-ம் தேதி அஞ்சலி செலுத்த அனுமதிக்கோரி காவல்துறையிடம் கடிதம் அளித்துள்ளோம். பட்டியலின வேட்பாளர்களை பொதுத் தொகுதியில் நிறுத்தி வெற்றி பெறச் செய்து சமூக நீதியை நிலை நாட்டியவர் ஜெயலலிதா. ஜெயலலிதா மத்திய அரசுக்கு கொடுத்த அரசியல் அழுத்தங்களால் தான் 69 சதவீத இடஒதுக்கீடு சாத்தியமானது.

அதிமுக மாவட்ட செயலாளர்கள் அதிருப்தியில் உள்ளதாக வரும் செய்திகளில் உண்மை இல்லை. எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சி எழுச்சியுடன் உள்ளது. இன்னும் 3 மாதத்தில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும். பாஜகவுடன் எந்தத் தேர்தலிலும் கூட்டணி இல்லை. அதிமுகவின் அடித்தளம் வலுவாக உள்ளது. பூத் கமிட்டி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன, எனக் கூறினார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!