ஒரு வாரம் தான் டைம்… இல்லனா நடக்கறதே வேற : வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி எச்சரிக்கை!!

Author: Udayachandran RadhaKrishnan
14 November 2022, 3:38 pm

கோவை மாவட்டத்தில் மழையால் சேதம் அடைந்த சாலைகளை ஒரு வாரத்தில் சரி செய்ய வில்லை எனில் மிகப்பெரிய அளவில் மக்களை திரட்டி உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்கள் மத்தியில் தெரிவித்துள்ளார்.

கோவை குனியமுத்தூர் 87 வது வார்டு பகுதியில் மழைநீரால் நீர் சூழ்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பார்வையிட்டார். கார் செல்ல இயலாத இடங்களில் அவர் இரு சக்கர வாகனங்களில் சென்று பார்வையிட்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இந்தபகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகின்றது, இது தாழ்வான பகுதி என்பதால் செங்குளத்தில் நீர் நிறையும் போது இது போன்ற பிரச்சினைகள் வரும் எனவும், இப்பகுதியில் சாக்கடைக்கு டெண்டர் விடப்பட்டது, அதையும ரத்து செய்து விட்டார்கள் என தெரிவித்தார்.

இந்த பகுதியில் மழையால் பாதிக்கப்பட்டது குறித்து கமிஷ்னர், கலெக்டர் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தும் வரவில்லை, காலையில் இருந்து அதிகாரிகள் யாரும் வரவில்லை என தெரிவித்த அவர், இந்த பகுதியில் வயசான அம்மா, வீட்டிற்குள் புகுந்த தணணீரில் தவித்தார்கள். அவரை மீட்டு வேறு இடத்தில் தங்க வைத்துள்ளோம் எனவும், இந்த பகுதியில் மக்களுக்கு அதிகாரிகள் எதுவும் செய்யவில்லை.

தயவு செய்து அதிகாரிகள் வேலை செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார். கோவையில் பல பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது எனவும், குறிச்சி குளம் பணிகள் ஒன்றரை வருடம் நடைபெறவில்லை எனவும், அதிமுக ஆட்சியில் டெண்டர் விடப்பட்ட 500 சாலை பணிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

இப்போது மாநகராட்சியில் வரிகள் அதிகம் விதிக்கபட்டுள்ளது வருவாய் வருகின்றது என தெரிவித்த அவர், பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

சென்னையில் நான் செய்த பணிகளுக்கு பின்பு இது வரை திமுக அரசு எந்த வேலையும் பார்க்க வில்லை எனவும் குற்றம்சாட்டினார். கோவை மாவட்ட மக்களை இந்த அரசு புறக்கணிக்கின்றனர் என தெரிவித்த அவர், இன்று மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்த பின்னர் அதிகாரிகளிடம் மனுவாக கொடுக்க போகின்றேன் எனவும் ஒரு வார காலத்திற்குள் நடவடிக்கைகள் எடுக்கப்பட வில்லை எனில் மக்களை திரட்டி உண்ணாவிரத போராட்டம் நடத்த போவதாகவும் தெரிவித்தார்.

கோவையில் 500 சாலை பணிகள் நிறுத்தப்பட்டுளளது, பாலப்பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. இவற்றை துவங்க வேண்டும் என தெரிவித்த அவர், நான் அமைச்சராக இருந்த போது இருந்தால் என்னுடன் எத்தனை அதிகாரிகள் இருப்பார்கள், இப்போது அதிகாரிகள் யாரும் இல்லை, நான் எம்.எல்.ஏ தான் என்றும் தெரிவித்தார்.

மக்கள் எங்கே திமுகவை பாராட்டுகின்றனர் என தெரியவில்லை,
யாருக்குமே இங்கு அவர்கள் நல்லது பண்ணவில்லை எனவும் தெரிவித்தார்.

சென்னையில் சாலைகள் சூப்பராக இருப்பதாக சொல்கின்றனர், மழைநீர் வடிகால் பணிகள் அனைத்தும் அதிமுக ஆட்சியில் அமைக்கப் பட்டது என தெரிவித்த அவர், இந்த அரசு எதையும் செய்யவில்லை எனவும் நன்றாக கூட மழை பெய்ய வில்லை எனவும் தெரிவித்தார்.

இந்த அரசு விளம்ப்படுத்துவதில் கவனம் செலுத்தாமல் வேலையை செய்ய வேண்டும், தொலைக்காட்சியில நடிக்காமல் வேலை செய்ய வேண்டும் எனவும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?