குழந்தைகளை ஏற்றி சென்ற தனியார் பள்ளி வாகனத்தின் டயர் திடிரென கழன்று ஓடியதால் பரபரப்பு : பதற வைக்கும் விபத்தின் காட்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
23 February 2022, 11:36 am

திருப்பூர் : தனியார் பள்ளியில் குழந்தைகளை ஏற்றிச் சென்ற பள்ளி வாகனத்தின் டயர் கழன்று சாலையில் ஓடியதால் பதற்றம் ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் உடுமலை சாலையிலிருந்து பொள்ளாச்சி சாலையில் உள்ள பொண்ணாபுரம் பகுதியை நோக்கி வந்த விவேகம் மேல்நிலைப்பள்ளி பள்ளி வேன் டயர் திடீரென கழன்று ஓடியது.

இதில் 15க்கும் மேற்பட்ட குழந்தைகள் லேசான காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் . இச்சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில் பெற்றோர்களை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது .

மேலும் வட்டார போக்குவரத்து அலுவலர் தாராபுரம் மற்றும் அதன் சுற்றியுள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் உள்ள வாகனங்களை சோதனை நடத்தி தரச் சான்றிதழ் வழங்கிய பின்பு பயன்படுத்தப்பட வேண்டும் எனவும் பெற்றோர்களின் கோரிக்கையாக உள்ளது.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?