சீமான் மீது தொடரும் அதிருப்தி… நாமக்கல் நிர்வாகிகள் எடுத்த அதிரடி முடிவு!

Author: Udayachandran RadhaKrishnan
28 November 2024, 3:55 pm

நாமக்கல் ஒருங்கிணைந்த மாவட்ட முன்னாள் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட தலைவர் வினோத்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது கடந்த 20 ஆண்டுகளாக கட்சியில் பணியாற்றி வருகிறேன் தலைமை எங்கள் மீது துளி கூட அக்கறை இல்லை எனவும் பொறுப்புகள் வழங்கப்படவில்லை.

என்னை சார்ந்துள்ள 500-க்கும் மேற்பட்ட மகளிர் பாசறை உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் விலகுவதாக தெரிவித்தார்.

இதையும் படியுங்க: 10 வருடம் வாய்ப்பில்லாமல் தவித்த நடிகை.. இயக்குநர் கெஞ்சியதால் நடித்த படம் BLOCKBUSTER!

ஏற்கனவே அடையாள அட்டை வைத்திருந்த நாங்கள் எங்கள் தலைமைக்கு கடிதத்தை அனுப்ப இருக்கிறோம் எனவும் தெரிவித்தார்.

கட்சித்தலைமை பல்வேறு முரண்பாடான செயல்பாடுகளாலும் தொண்டர்களை மதிக்காததால் கட்சியிலிருந்து விலகுகிறேன் எனவும் மாற்று கட்சி இதுவரை சேரவில்லை எனவும் தமிழகம் மதச்சார்பற்ற மாநிலம் என தெரிவித்த சூழ்நிலையில் ஒரு சிலர் சங்கீகளை ஆதரிக்கிறார்கள் என வெளிப்படையாக தெரிவிக்கிறார்கள். ஆனால் அந்த போக்கு எங்களுக்கு பிடிக்கவில்லை என வினோத் குமார் தெரிவித்தார்.

disatified with seeman NTK Executives Quit

மேலும் கட்சி தலைமை சரியில்லை தலைமை தன்னை தொடர்பு ஏற்படுத்தவில்லை எனவும் ஏற்கனவே பொறுப்புகள் இருந்த நிலையில் அதை கலைத்ததால் கட்சியை விட்டு விலகுவதாக பத்திரிகையாளர்களுக்கு தெரிவித்தார்.

பேட்டியின் போது மோகனூர் நகர செயலாளர் செந்தில் குமார் பொருளாளர் சதீஸ்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்

  • Sathyaraj Daughter Divya Sathyaraj என் வாழ்க்கையில் மிகப்பெரிய சோதனையான காலம் இது.. பிரபல நடிகரின் மகள் வேதனை!
  • Views: - 93

    0

    0

    Leave a Reply