கருத்துக்களை வெளிப்படுத்துவதை எந்த வகையிலும் முடக்கக்கூடாது : தமிழக பாஜகவுக்கு பச்சைக் கொடி காட்டிய நீதிமன்றம்!!

Author: Babu Lakshmanan
30 June 2023, 7:30 pm

கரூர் திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் நாளை பாஜக பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்க உத்தரவிடக் கோரிய வழக்கு இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது.

இந்த விசாரணையில், மனுதாரரின் மனு உரிய காரணம் இல்லாமல் நிராகரிக்கப்பட்டுள்ளதாக கூறி பொதுக்கூட்டம் நடத்த அனுமதி அளித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும் ஒரு கட்சி ஆட்சிக்கு வந்ததும், எதிர்கட்சியினர் பொதுமக்களிடம் கருத்து தெரிவிப்பதை தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறது. எதிர்கட்சியும், சில ஆண்டுகள் கழித்து ஆளும் கட்சியாக மாறும்போது இதே வேலையை தான் செய்கிறது.

கருத்துக்களை வெளிப்படுத்துவதை எந்த வகையிலும் முடக்கக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

  • murali love actress sivaranjani but she did not accept him மது போதையில் அத்துமீறல்? திருமணம் ஆன பின்பும் நடிகையை காதலித்த முரளி! அடக்கொடுமையே?