கோவையில் ரூ.25 கோடி மதிப்புள்ள இடத்தை போலி பத்திரம் தயாரித்து அபகரிப்பு : பதிவாளர் முத்திரையிட்டு மோசடி செய்தது அம்பலம்!!

Author: Udayachandran RadhaKrishnan
30 July 2022, 7:37 pm

ரூ.25 கோடி ரூபாய் மதிப்புள்ள இடத்தை போலி பத்திரம் தயாரித்த ஆபிரகாம் தாஸ் என்பவர் ராமநாதபுரம் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்

கோவை போத்தனுரை சேர்ந்தவர் கமலேஸ்வரன். இவர் குனியமுத்தூரில் உள்ள அறக்கட்டளையின் தலைவராக உள்ளார். இந்த அறக்கட்டளையை திருச்சியை சேர்ந்த ஆபிரகாம் தாஸ் (வயது 59) என்பவர் போலி ஆவணங்கள் தயாரித்து அபகரித்ததாக ராமநாதபுரம் போலீசில் புகார் அளித்தார்.

அதன் பேரில் காவல் ஆய்வாளர் பிரபா தேவி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். விசாரணையில் போத்தனூர் மேட்டூர் பகுதியில் அறக்கட்டளைக்கு சொந்தமான 4.36 ஏக்கர் இடத்தை சார்- பதிவாளரின் முத்திரை மற்றும் கையெழுத்தை போலியாக சித்தரித்து அந்த இடத்தை அருள் என்பதற்கு பவர் போட்டு கொடுத்துள்ளது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் ஆபிரகாம் தாஸ் மற்றும் அருள் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதில் ஆபிரகாம் தாசை போலீசார் கைது செய்தனர். மேலும் 4.36 சென்ட் இடம் தற்போதைய மதிப்பு 25 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!