அகஸ்தியர் அருவிக்கு செல்ல தடை நீடிப்பு: பாபநாசத்தில் குவிந்த மக்கள் கூட்டம்…..

Author: Aarthi
4 October 2020, 12:17 pm
papanasam - updatenews360
Quick Share

அகஸ்தியர் அருவிக்கு செல்ல தடை நீடிப்பதால் பாபநாசம் படித்துறையில் குளிக்க சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, தற்போது பல்வேறு கட்ட தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பொது போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டாலும், சுற்றுலா தலங்களுக்கு செல்ல அனுமதி வழங்கப்படவில்லை.

நெல்லை மாவட்டத்தில் ஆண்டு முழுவதும் தண்ணீர் ஆர்ப்பரிக்கும் அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவி மற்றும் தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் குளிப்பதற்கும் தடை நீடித்து வருகிறது.

ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், பாபநாசத்தில் உள்ள பிரசித்திப் பெற்ற பாபநாச சுவாமி கோயிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்து உள்ளது. இந்நிலையில் தொடர் விடுமுறை காரணமாக பாபநாசத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. ஏராளமான சுற்றுலா பயணிகள் படித்துறையில் காத்திருந்து புனிதநீராடி விட்டு கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Views: - 65

0

0