ஈரோடு மாவட்டத்தில் உச்சம் பெற்ற பாதிப்பு.. குறையாத சென்னை : இன்றைய கொரோனா நிலவரம்!!

Author: Udayachandran RadhaKrishnan
16 October 2021, 7:14 pm
TN Corona -Updatenews360
Quick Share

சென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்றும் சற்று குறைந்துள்ளது.

கொரோனாவின் 2வது அலை பரவத் தொடங்கியதால் பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. இந்த நிலையில், இன்று 1,233 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,85,874ஆக அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக, இன்று சென்னையில் 160 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து, கோவையில் 136 பேருக்கும், செங்கல்பட்டுவில் 90 பேருக்கும், ஈரோட்டில் 97 பேருக்கும், திருப்பூரில் 70 பேருக்கும் உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் இன்று 15 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35,884 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 1,434 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதுவரையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26 லட்சத்து 34 ஆயிரத்து 968 ஆக அதிகரித்துள்ளது.

Views: - 227

0

0