தடுப்பு வேலிகளை பிய்த்துக் கொண்டு ஆர்பரித்த வெள்ளம் : திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு!!

16 June 2021, 11:44 am
Thirparapu - Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : கனமழையால் கோதையாற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டதால் திற்பரப்பு அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் நீரால் தடுப்பு வேலிகள் சேதமடைந்தன.

தென் மேற்கு பருவ மழை யின் தாக்கம் கேரளாவை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்திலும் அதிகரித்து வரும் நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.

இதனால் மாவட்டத்தில் உள்ள பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி உட்பட அணைகளும் நீர் நிலைகளும் முழு கொள்ளளவை எட்டி உள்ளது,தொடர்ந்து நீர்வரத்து அதிகமாக உள்ளதால் பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணைகளில் இருந்து வினாடிக்கு 1200 கன அடி உபரி நீர் வெளியேற்ற பட்டு வருகின்றனர்.

இதனால் கோதையாற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. தொடர்ந்து அருவியில் பாதுகாப்பிற்காக வைக்கப்பட்டுள்ள கைப்பிடிகள் மற்றும் பக்கச் சுவர்கள் முற்றிலுமாக சேதம் அடைந்துள்ளன.

மேலும் சிறுவர்கள் குளிக்கும் நீச்சல் குளத்தில் சுற்றுப்புறத்தில் அமைக்கப்பட்டுள்ள கம்பிகள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன. தற்பொழுது திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் வந்து செல்வதற்கு இதமான சூழ்நிலைகள் அமைந்திருந்தும் தற்போது சுற்றுலா தலங்கள் திறக்கப்படாததால் திற்பரப்பு அருவி வெறிச்சோடி காணப்படுகிறது,

Views: - 212

0

1