போலி டிடெக்டிவ் ஏஜென்சி மூலம் பணம் பறித்த இருவர் கைது : சைபர் கிரைம் காவல்துறையினர் அதிரடி

Author: Babu Lakshmanan
9 August 2022, 10:38 am

திருச்சி : திருச்சியில் போலி டிடெக்டிவ் ஏஜென்சி மூலம் பணம் பறித்த இருவரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

திருச்சி மாவட்டத்தில் போலியான டிடெக்டிவ் ஏஜென்சி மூலம் ஏமாற்றப்பட்டதாக முசிறியை சேர்ந்தவர் திருச்சி மாவட்ட சைபர் குற்ற பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ஆய்வாளர் அன்புச்செல்வன், உதவி ஆய்வாளர்கள் சதிஷ் குமார் (தொழில்நுட்பம்பிரிவு) ஆகியோரின் தலைமையிலான குழுவினர் விசாரணையை மேற்கொண்டனர்.

விசாரணையில் திருச்சி செந்தண்ணீர்புரம், எடமலைபட்டிப்புதூர் ஆகிய இடங்களில் Google business மூலம் Trichy Detective Agency என்ற பெயரில் போலியான ஏஜென்சி நடத்தியும், அதன் மூலம் பொது மக்களை ஏமாற்றிய வருவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, 2 நபரிடம் காவல்துறை விசாரணை மேற்கொண்டனர்.

அதில் , கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த சதீஷ்குமார் (31) மற்றும் வசந்த் (24) என தெரியவந்தது. மேலும், போலி டிடெக்டிவ் ஏஜென்சி மூலம் பணம் பறித்த தெரிய வந்ததையடுத்து அவர் இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

தொடர்ந்து இருவரையும் திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர். பொதுமக்கள் இது போன்ற போலியான டிடெக்டிவ் ஏஜென்சியை நம்பி தங்களின் பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம் என்று திருச்சி மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தின் சார்பாக கேட்டுக் கொண்டுள்ளனர்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!