மருத்துவம் படிக்காமலேயே மருத்துவம் பார்த்து வந்த பெண் போலி மருத்துவர் கைது – மருத்துவமனையாக செயல்பட்டு வந்த கிளினிக்கிற்கு சீல்

27 October 2020, 9:11 pm
Quick Share

வேலூர்: காட்பாடியில் மருத்துவம் படிக்காமலேயே மருத்துவம் பார்த்து வந்த பெண் போலி மருத்துவரை காவல்துறையினர் கைது செய்து, மருத்துவமனையாக செயல்பட்டு வந்த கிளினிக்கிற்கு சீல் வைத்தனர்.

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகேயுள்ள பிரம்மபுரம் கிராமம் திருவள்ளுவர் தெருவில் பல ஆண்டுகளாக மருத்துவப்படிப்பை படிக்காமல் போலியாக அலோபதி மருத்துவம் பார்த்து வந்த விஜயகுமாரி (க/பெ ) லேட் வெங்கட்ராமன்.இவர் அதே பகுதியில் பல ஆண்டுகளாக கடை ஒன்றை வைத்து அதனை மருத்துவ கிளினிக்காக பயன்படுத்தி மக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்துள்ளார். இவர் மருத்துவபடிப்பு படிக்காமல் நர்சிங் படிப்பை மட்டும் படித்துவிட்டு போலியாக தன்னை மருத்துவர் என கூறிக்கொண்டது தெரியவந்தது.


இதனையடுத்து விஜயகுமாரியை காவல்துறையினர் கைது செய்து, கிளினிக்காக செயல்பட்டு வந்த கடைக்கு சீல் வைத்தனர். போலி மருத்துவரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். பல ஆண்டுகளாக தன்னை மருத்துவர் என கூறி கொண்டு மக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்த போலி பெண் மருத்துவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 18

0

0