‘ஒரு பரிகாரம் பண்ணுனா போதும்’: வீடுகளுக்குள் புகுந்த போலி சாமியார்கள்…ஆயிரக்கணக்கில் பணம் கேட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி..!!

Author: Aarthi Sivakumar
28 November 2021, 6:14 pm
Quick Share

கோவை: சூலூர் அருகே சாமியார் வேடமணிந்த 4 பேர் கொண்ட கும்பல் திடீரென வீடுகளுக்குள் புகுந்து பரிகார பூஜை செய்வதாக கூறி ஆயிரக்கணக்கில் பணம் கேட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் சூலூர் அருகே பாப்பம்பட்டி பிரிவு பகுதியில் பொதுமக்கள் அதிகம் வசிக்கும் தெருக்களில் ஆந்திர மாநிலம் பள்ளிப்பட்டு பகுதியில் இருந்து வருவதாகக் கூறிக் கொண்டு காவி உடை அணிந்த 4 பேர் கொண்ட கும்பல் வந்துள்ளது.

இவர்கள் ஒரு வீட்டின் தகவலை வேறொரு வீட்டில் தெரிந்து வைத்துக் கொண்டு குறிப்பிட்ட வீட்டுக்கு சென்று முன்பின் தெரியாவிட்டாலும் கூட இந்த வீட்டில் பரிகாரம் செய்ய வேண்டும் எனக் கூறி ஆயிரக்கணக்கில் பணம் கேட்டுள்ளனர்.

இதனால், சந்தேகம் அடைந்த சிலர் அவர்களிடம் கேள்விகளை கேட்டதால் தாங்கள் ஆந்திராவில் இருந்து வருவதாகவும் தாங்களே நேரடியாக தங்களுடைய மடத்திற்கு பணங்களை அனுப்பலாம் என போலியான ஒரு முகவரியை கொடுத்துள்ளனர்.

அவர்கள் கொடுத்த முகவரியில் பொதுமக்கள் விசாரித்தபோது இவர்கள் போலி நபர்கள் என தெரியவந்தது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர். இதுகுறித்து போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

Views: - 188

0

0