முதல்வர் ஸ்டாலினுக்கும் கேரள கம்யூனிஸ்ட்டுக்கும் கள்ள உறவு : அண்ணாமலை விமர்சனம்!!

Author: Udayachandran RadhaKrishnan
5 November 2021, 6:54 pm
annamalai- Updatenews360
Quick Share

திருச்சி : முல்லை பெரியார் அணை விவகாரத்தில் ஸ்டாலினுக்கும் கேரள கம்யூனிஸ்ட்க்கும் இடையே கள்ள உறவு உள்ளது,ஸ்டாலின் அதனை விளக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இயற்கை பேரிடரால் சேதம் அடைந்த கேதார்நாத் கோவில் சீரமைப்பு பணிகள் முடிவுற்ற நிலையில் இன்று பிரதமர் நரேந்திர மோடி அதனை திறந்து வைத்தார். இதை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றது.

வைணவ ஸ்தலங்களில் முதன்மையான திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் ஆலயம், பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான திருவானைக்காவல் உள்ளிட்ட இடங்களில் இன்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் ஆலயத்தில் தாயார் சன்னதி அருகே பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கும் நிகழ்வை LED திரைக்கு முன்பாக அமர்ந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் பா.ஜ.கவினர் பார்வையிட்டார்.

இதில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அண்ணாமலை , ஆதி சங்கரர் சென்ற எல்லா ஸ்தலங்களிலும் இன்று சிறப்பு பூஜை நடைபெற்றது. 8ம் தேதி தேனியில் முல்லை பெரியார் விவாகரம் தொடர்பாக பா.ஜ.க சார்பில் போராட்டம் நடத்த உள்ளோம்.

முல்லை பெரியார் அனை நம்முடைய கட்டுப்பாட்டில் உள்ள அணை. ஆனால் எந்த வித முன்னறிவிப்பும் இல்லாமல் தண்ணீர் திறந்துள்ளனர். கடந்த 4 நாகளாக நாங்கள் தமிழக அரசை கேட்டு எங்களுக்கு எந்த பலனும் இல்லை.

5 மாவட்ட விவசாயிகளுக்கு மிக பெரிய துரோகத்தை நிகழ்த்தி உள்ளனர், தவறு நடந்துள்ளது. முல்லை பெரியார் நீர் மட்டம் 142 அடி சென்றால் தான் நமக்கு 10 டி.எம்.சி கிடைக்கும். ஆனால் 136 அடி இருந்த போதே ஷட்டரை திறந்துள்ளனர். வாய்மொழியாக அனுமதியை கொடுத்து விட்டு நடிக்கின்றனர்.

100 நாள் வேலைத்திட்டத்தில் மாபெரும் அரசியல் நடக்கிறது,மத்திய அரசு இரண்டு தவனையாக நிதியை கொடுத்து உள்ளனர். தமிழக அரசு சார்பில் மத்திய அரசை அனுகிய போது சரியான நேரத்தில் பணத்தை கொடுத்து உள்ளனர் – 100 நாள் வேலை திட்டத்தில் 246 கோடியே 13 லட்சம் ஊழல் நடந்துள்ளது.

1 கோடி 85 லட்சம் மட்டுமே தமிழக அரசு மீட்டுள்ளது – ஒரு மாவட்டத்தில் கூட குறை தீர்க்கும் அதிகாரி இல்லை,தமிழக அரசு நியமிக்கவில்லை. அக்டோபர் 1 வாரத்தில் propsal கொடுக்காமல் … தாமதமாக வழங்கிவிட்டு தமிழக அரசு மத்திய அரசை குறை கூறுகிறது.

குறை தீர்க்கும் அதிகாரியை நியமிக்க வேண்டும். தமிழக அரசு இதில் வேகமாக தலையிட்டு ஊழல் பணத்தை மீட்க வேண்டும். தேனி மாவட்டத்திற்கும் முல்லை பெரியாருக்கும் மட்டுமே அதிகம் இணக்கம் உண்டு. அணை திறக்க வேண்டும் என்றால் அங்கு நம் தேனி ஆட்சியர் இருக்க வேண்டும்,ஆனால் அவர் இல்லை.

2024ல் துணை பிரதம மந்திரியாக நிற்பதற்காக கேரளா உதவி செய்யும் என்று ஸ்டாலின் டிரமா செய்கிறார். பொதுப்பணிதுறை அமைச்சர் இன்று தேனி சென்றுள்ளார். கண் கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம் செய்து என்ன புண்ணியம்.

ஸ்டாலினுக்கும் கம்யூனிஸ்டுக்கும் கள்ள உறவு உள்ளது – அது என்ன என்று விளக்க வேண்டும். ப.சிதம்பரம் நிறைய படித்தவர். நிறைய படித்திருந்தாலே common sense குறைவாகதான் இருக்கும்.

ப.சிதம்பரம் உண்மையாக தமிழகத்தின் மீது அக்கறை கொண்டவராக இருந்தால் தமிழக அரசை கேட்க வேண்டும். தமிழகத்தில் ஏன் பெட்ரோலை குறைக்கவில்லை என்று மு.க ஸ்டாலினிடம் கேட்க வேண்டும். பா.சிதம்பரம் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இந்தியாவிற்கு காங்கிரஸ் தேவையே இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

இந்துகளுக்கு சாதி என்கிற முறை இருக்க கூடாது – இந்து என்பது வாழ்வியல் முறைமுறை .தமிழகத்தில் அனைத்து மதமும் ஒன்றாக இருக்க வேண்டும். ராமேஸ்வரம் சென்ற போது கோரிக்கை வைத்தோம். 22 தீர்த்தங்களை திறக்க கூறி தற்போது திறந்துள்ளார்கள் அதற்கு
நாங்கள் நன்றியை கூறி கொள்கிறோம்..

பார்கள், திரையரங்களில் கூட்டம் முழுமையாக உள்ளது,எனவே வைகுண்ட ஏகாதசி போன்ற விழாக்களில் கண்டிப்பாக முழுமையாக பக்தர்களை அனுமதிக்க வேண்டும்.
அறங்காவலர் நியமனத்தை நியாயமாக செய்ய வேண்டும் என கூறினார்.

Views: - 487

0

0