நான் அழ மாட்டேன்…யாருக்கு வலி அதிகம் தெரியுமா..? பிரபல நடிகரின் 2ம் ஆண்டு நினைவு நாளில் அவரது மனைவி உருக்கமான பதிவு…

Author: Babu Lakshmanan
26 March 2022, 2:55 pm
Quick Share

கடந்த 2013ம் ஆண்டில் வெளியாகிய கண்ணா லட்டு திண்ண ஆசையா திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர், மருத்துவர் சேதுராமன். நடிகர் சந்தானத்தின் நெருங்கிய நண்பரான இவர்,வாலிப ராஜா, சக்க போடு போடு ராஜா, 50/50 போன்ற படங்களில் கதாநாயகனாகவும் துணை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.

நடிப்பில் தீவிரம் காட்டி வந்தாலும், மறுபுறம் தனது மருத்துவ பணியிலும் கவனம் செலுத்தி வந்தார்.

கடந்த 2016ஆம் ஆண்டு சொந்தமாக ஒரு தோல் நோய் மருத்துவமனை ஒன்றை திறந்தார். இந்த நிகழ்ச்சியில் சந்தானம், பாபிசிம்ஹா, நிதின் சத்யா, வெங்கட்பிரபு என்று பல்வேறு பிரபலங்களும் கலந்து கொண்டார்கள். கடந்த 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12 ஆம் தேதி உமா என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர், இதற்கு அடுத்த ஆண்டே அண்ணா நகரில் தனது இரண்டாவது மருத்துவமனையையும் திறந்தார் சேதுராமன்.

திரைத்துறையிலும், மருத்துவத்திலும் சிறப்பாக வாழ்க்கையை நகர்த்தி கொண்டிருந்த சேதுராமன், கடந்த 2020ம் ஆண்டு மார்ச் 26ம் தேதி மாரடைப்பால் காலமானார். இது திரைத்துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேதுராமன் உயிரிழக்கும் போது, அவரது மனைவி 2வது முறையாக கர்ப்பமாக இருந்தார். இதைத் தொடர்ந்து, தன் கணவனே தனக்கு பிறந்த குழந்தையாக பிறந்துள்ளார் எனக் கூறி, தனக்கு தானே அவர் ஆறுதல் அடைந்து கொண்டார்.

இந்த நிலையில் சேதுராமனின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, அவரது மனைவி உமா தன் இன்ஸ்டா பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது :- நான் அழுதால் கண்டிப்பாக இந்த உலகைவிட்டு திடீரென்று பிரிந்த அவரின் ஆத்மாவிற்கு மிகுந்த வலியை கொடுக்கும் என்பதை நான் புரிந்துகொண்டேன். நாம் ஒரு ஆத்மாவை தான் இழந்தோம். ஆனால், அவரின் ஆத்மா தான் சம்பாதித்து வைத்து இருந்த பலரை பிரிந்து சென்றுவிட்டது. அதனால், யாருடைய வலி அதிகம். ஒரு உயிரை இழந்த உங்கள் வாழ்க்கையா ? இல்லை அனைத்து உறவையும் இழந்த அவரின் வாழ்க்கையா, என தெரிவித்துள்ளார்.

Views: - 645

1

0