நான் என்ன அவ்வளவு குறைந்தவனா.? சிவகார்த்திகேயன் மீது செம கோபத்தில் பிரபல நடிகர்.! நான் தான் என்ற அகங்காரம் கூடாதுங்க..!

Author: Rajesh
8 May 2022, 1:34 pm
Quick Share

சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள திரைப்படம் டான். இந்த திரைப்படத்தை அட்லீயின் உதவி இயக்குனர்களில் ஒருவராக இருந்த சிபி சக்கரவர்த்தி என்பவர் இயக்கியுள்ளார். சிவகார்த்திகேயனின் எஸ்.கே நிறுவனமும், லைகா நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. உதயநிதி ஸ்டாலின் இப்படத்தை தமிழகத்தில் வாங்கி வெளியிடுகிறார்.

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக டாக்டர் பட ஹீரோயின் பிரியங்கா மோகன் நடித்துள்ளார். மேலும், சிவாங்கி, சூரி, மிர்ச்சி விஜய், பால சரவணன் என பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ளார்.

இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு இணையான கதாபாத்திரம் எஸ்.ஜே.சூர்யா அவர்களுடையது இருக்குமாம். மேலும், எஸ்.ஜே.சூர்யா ‘மாநாடு’ திரைப்படம் மூலம் மிகவும் பிரபலமாகி விட்டார். இருந்தாலும், அவரது புகைப்படங்களை டான் பட போஸ்டர்களில் மிகவும் குறைவாகவே பயன்படுத்தியுள்ளனராம்.

குறைவான போஸ்டர்களில் மட்டுமே எஸ்.ஜே.சூர்யா இருக்கும்படி பார்த்துக்கொண்டனராம். இதற்கு காரணம் சிவகார்த்திகேயன் என்றும் தகவல்கள் கசிய தொடங்கியுள்ளது. இந்த பட விழாவில் ரசிகர்களுக்கு விநியோகிக்கப்பட்ட டிக்கெட்களில், எஸ்.ஜே.சூர்யா புகைப்படம் இடம் பெறவில்லையாம். ஆனால், சிவாங்கி, மிர்ச்சி விஜய், பாலா சரவணன் ஆகியோரது படங்கள் இடம் பெற்றிருந்தனவாம்.

இதன் காரணமாகத்தான் டான் பட விழாவில் கூட , மாநாடு படத்தில் வரும் ‘வந்தான் சுட்டான் செத்தான் ரிப்பீட்டு’ எனும் வசனத்தை பேச சொல்லி ரசிகர்கள் கேட்டும் எஸ்.ஜே.சூர்யா, அதனை கண்டுகொள்ளாமல் தனது பேச்சை சுருக்கமாக முடித்துவிட்டு மேடையில் இருந்து கீழே இறங்கிவிட்டாராம் .

ஒருவேலை இந்த விஷயம் எஸ்.ஜே.சூர்யாவுக்கு உண்மை என தெரிந்து விட்டால், அவரே நேரடியாக தனது ட்விட்டர் பக்கத்தின் மூலமாகவோ அல்லது வேறு ஒரு பொது மேடையிலோ இதற்கு விளக்கம் கொடுத்துவிடுவார். எதையும் மறைத்து வைத்து பேசும் நபர் எஸ்.ஜே.சூர்யா கிடையாது என்பதும் நிதர்சனமான உண்மை.

Views: - 796

0

0