Auntyயால் ஆண்டி ஆன பிரபல நடிகர் : ரஜினி, கமல், விஜய், அஜித்னு எல்லாரும் கூட நடித்த நடிகரின் பரிதாப நிலை!!!
Author: Udayachandran RadhaKrishnan19 January 2022, 12:44 pm
சினிமாவில் சும்மா தலைகாட்டி சென்ற நடிகர்களும் உண்டு.. தனது திறமையால் உச்சத்துக்கே சென்று கிசுகிசுவால் மார்க்கெட்டை இழந்தவர்களும் உண்டு.
அப்படிப்பட்ட நடிகர்களில் தனது திறமையால் சினிமாவில் நுழைந்தவர் நடிகர் கரண். தனது சினிமா வாழ்க்கையை முதலில் குழந்தை நட்சத்திரமாக தொடங்கியவர், 1992ல் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் அண்ணாமலை படத்தில் நடித்தார். ரஜினியின் மகளை காதலிப்பவராக நடித்த கரணின் நடிப்பு பாராட்டுக்களை பெற்றன.
பின்னர், அஜித், விஜய், பிரசாந்த் என 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகர்களின் நண்பராகவும், வில்லனாகவும் மிரட்டினார். நம்மவர் படத்தில் தான் முதன்முதலில் வில்லனாக நடித்தார்.
பின்னர் சந்திரலேகா, கோயம்புத்தூர் மாப்பிள்ளை, கோகுலத்தில் சீதை, நேருக்கு நேர், கண்ணாத்தாள் போன்ற எண்ணற்ற படங்களில் நெகட்டிவ் ரோல்களில் வந்து அசத்தியிருப்பார்.
பெரும்பாலான படங்களில் வில்லன் தோற்றங்களில் மட்டுமே நடித்திருப்பார் கரண். ஆள் பார்க்க அம்சமாகவும், பப்லியாகவும் இருப்பதால் இவருக்கு ரசிகர்களை விட ரசிகைகளே அதிகம்.
ஆனால் காலம் செல்ல செல்ல சினிமாவும் இவரை விட்டு விலகியது. வில்லன் கதாபாத்திரம் வெறுத்துவிட்டதால் ஹீரோவாக களமிறங்கினார் கரண். கொக்கி படம் மூலம் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்த இவர், கருப்பசாமி குத்தகைதாரர், தீ நகர், காத்தவராயன், மலையன், கனகவேல் காக்க, தம்பி வெட்டோத்தி சுந்தரம் போன்ற படங்களில் கதாநாயகான நடித்தார். மலையன் படத்திற்காக கரணுக்கு தமிழக அரசின் சிறந்த நடிகர் விருதையும் பெற்றார்.
நாயகனாக நடித்தும் மார்க்கெட்டை இழக்கமால் இருந்த இவருக்கு ஒரு பெண்ணின் மூலம் சந்திக்கு சென்றுவிட்டார். 2016ம் ஆண்டு வரை படத்தில் நடித்த கரண், அதன் பின் ஆள் அட்ரசே இல்லாமல் இருக்கிறார். இதற்கெல்லாம் காரணம் 42 வயதுடைய பெண்தான் என கூறப்படுகிறது.
42 வயதுடைய பெண் ஒருவர் நடிகர் கரணுக்கு உதவியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். தயாரிப்பு நிறுவனங்கள் கரணை அணுகிய போதெல்லாம் இவர்தான் சம்பளம் குறித்து பேசுவாராம். மேலும் கரணுக்கும் அந்த பெண்ணுக்கும் தகாத உறவு இருந்ததாகவும் கூறப்படுகிறது.
அந்த பெண்ணின் மகன், சினிமாவில் தயாரிப்பாளராக உள்ளார் என்பது கூடுதல் தகவல். 42 வயது Auntyயால் நடிகர் கரண் ஆண்டியானதாக பிரபல நடிகரும், பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் இந்த தகவலை கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
3
1